அவிசாவளை − மாலியன்கம − ரிட்டிகஹவெல பகுதியில் பஸ் ஒன்றுக்கு பிரதேசவாசிகள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
பஸ்ஸில் மோதுண்டு, சைக்கிள் ஓட்டுநர் (வயது 65) உயிரிழந்ததை அடுத்து ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பஸ்ஸிற்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.