தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயரத்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதால் அதனுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜனவரி 18 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல், கல்விப் பொதுத் தராதர உயரத்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பரீட்சை நிறைவடையும் வரையில் இடைநிறுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.