காவல்துறை விசேட அதிரடிப்படையில் பிரதான காவல்துறை பரிசோதகர்களாக சேவையாற்றிய 9 பெண் அதிகாரிகள் உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் சேவையின் அடிப்படையில், அரச சேவை ஆணைக்குழுவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள 9 பெண் காவல்துறை அத்தியட்சகர்களில் என்.டி.என் குமாரியும் அடங்குகின்றார்.
அவர், காவல்துறை விசேட அதிரடிப்படையின் முதலாவது உதவி காவல்துறை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.