அடிக்கடி துன்புறுத்தியதால் 34 வயது கணவரை கோடரியால் தாக்கி கொலை!

அடிக்கடி துன்புறுத்தியதால் 34 வயது கணவரை கோடரியால் தாக்கி கொலை!


குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெண்தலந்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர், அவரது மனைவி கோடரியால் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்றிரவு (08) இவரின் 31 வயதான மனைவி கோடரியால் பின்னாலிருந்து தாக்கிய நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.


படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த கணவர் மதுபோதையில் மனைவிக்கு அவ்வப்போது துன்புறுத்துவது தெரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கணவரிடம் இருந்து தப்பிக்க 2 குழந்தைகளுடன் மனைவி பக்கத்து வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளார்.


கொலை நடந்த அன்று இரவும் மனைவியை கூரிய ஆயுதம் மற்றும் ஆசிட் போத்தலால் தாக்க வந்துள்ளார். இதற்கு மனைவி தற்காக்கும் விதமாக இந்த கொலை நடந்துள்ளது.


சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.