நாட்டில் அனைத்து பிரஜைக்கும் டிஜிட்டல் வாலட் வழங்கப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் அனைத்து பிரஜைக்கும் டிஜிட்டல் வாலட் வழங்கப்படும்!


டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் டிஜிட்டல் வாலட் (digital wallet ) மென்பொருளை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக இளைஞர் விவகார அமைச்சரும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


கையடக்க தொலைபேசி மூலம் பணத்தை செலுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட LANKA QR குறியீட்டை கம்பஹாவில் மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டார்.


கடவுச்சீட்டு, பிறப்பு, விவாகச் சான்றிதழ்கள், பரீட்சைப் பெறுபேறுகள் உட்பட அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களை தமது கைத்தொலைபேசியில் களஞ்சியப்படுத்துவதற்கான டிஜிட்டல் கட்டமைப்பு வசதி இதன் மூலம் கிடைக்கும்.


தேவையான சந்தர்ப்பங்களில் எந்தவொரு சிக்கலும் இன்றி உரிய ஆவணங்களை டிஜிட்டல் முறையின் கைத்தொலைபேசி ஊடாக வழங்கும் வாய்ப்பு சகல பிரஜைகளுக்கும் கிடைக்கும் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.