அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு ,இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அதன்படி வெளியாகியுள்ள சில அமைச்சரவை முடிவுகள்,
• 2020-2021 பெரும்போகத்தில் விளைச்சல் குறைந்து பாதிப்புகளை எதிர்நோக்கும் விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்க 1கிலோ நெல்லுக்கு ரூ. 25 வீதம் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
• பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 450 சுகாதார நிலையங்களில் முதற்கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
• இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல் தலா 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும்.