அரச நிறுவனங்களின் செலவினங்களை மேலும் குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய பணியாளர்களை இணைத்துக்கொள்ளவும், புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை உடனடியாக நிறுத்தவும், எரிபொருள் மற்றும் தொலைபேசி செலவுகளை குறைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில அரச நிறுவனங்கள் அரசைச் சார்ந்திருப்பதை நிறுத்த வேண்டும் என்றும் நிதி அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.
அமைச்சின் ஊழியர்கள், அமைச்சின் செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு 5 லீற்றர் அனுமதிக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவை குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)