மாணவிகளுக்கு அந்தரங்கம் காண்பித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

மாணவிகளுக்கு அந்தரங்கம் காண்பித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!


பாணந்துறை பகுதியில் பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் காரில் இருந்தவாறு, பாடசாலை மாணவிகளுக்கு தனது அந்தரங்க பகுதியை காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவிகள் தமது  அதிபர் மூலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கெமராக்களை ஆய்வு செய்த நிலையில், சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.