நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் இக்காலகட்டத்தில் எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர் தொகையை முன்கூட்டியே அறிவிக்குமாறும் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளாந்த மின்சாரம் தடைப்படுவதற்கு ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட போதிலும், பின்னர் மத்திய வங்கியின் வாக்குறுதியின் அடிப்படையில் அந்த தீர்மானம் வாபஸ் பெறப்பட்டது. (யாழ் நியூஸ்)