உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரில் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஐந்து பேர் நீரில் அள்ளுண்டு சென்று காணாமல் போயிருந்த நிலையில் முதலில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து மேலும் 03 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
அதனையடுத்து, காணாமல் போன் மீதமுள்ள ஒருவரைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நீர்வீழ்ச்சியில் 11 பேர் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் 5 பேர் இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் அட்டம்பிட்டிய, நாவல வீதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.