காணாமல் போயுள்ள சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காணாமல் போயுள்ள சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


மஹரகம, நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர், கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


கடந்த 07ஆம் திகதி முதல் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக மஹரகம காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் காணாமல் போன சிறுமி தொடர்பில் எவ்வித தகவலும் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.


5 அடி 3 அங்குல உயரமுடைய, மஹரகம நாவின்ன பகுதியைச் சேர்ந்த நேஹா கௌமதி ஹேரத் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.


அவர் பச்சை நிற ரீ - சேர்ட் மற்றும் கருப்பு நிற கால்சட்டை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த சிறுமி தொடர்பில் தகவல் அறிந்தால் மஹரகம காவல் நிலைய பொறுப்பதிகாரி 071 859 1645 அல்லது மஹரகம காவல் நிலையத்தின் 0112 850222 அல்லது 0112 850 700 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.