File Photo |
பேருந்து கட்டணத்தை 17% அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் சங்கங்களும் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல தீர்மானித்துள்ளன.
ஹட்டன் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அந்த பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவிக்க ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)