காலியிலும் கொழும்பைப் போன்று துறைமுக நகரம்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலியிலும் கொழும்பைப் போன்று துறைமுக நகரம்!!!

காலி துறைமுகத்தை சுற்றி கொழும்பு துறைமுக நகரத்திற்கு நிகரான சுற்றுலா வலயம் ஒன்று அமைக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணல் நிரப்பி 40 ஹெக்டேரில் சுற்றுலா வலயத்தை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

காலி துறைமுகம் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் ஒரு அங்கமாகவே இந்த அபிவிருத்தி இடம்பெறவுள்ளது.

அமைச்சர் அபேகுணவர்தன மேலும் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுக நகரத்தைப் போன்று காலியிலும் தனியார் முதலீட்டாளர்கள் ஊடாக சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் வீடுகள் என்பன நிறுவப்படும்.

இத்திட்டத்தின் மூலம் காலியை சுற்றுலா தலமாக மேம்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.