இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேவினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
அதன்படி, மாலை 6.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை தெரு விளக்குகளை அணைத்துவிட்டு இரவு 11.00 மணிக்குப் பிறகு விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் அல்லது மாலை 6.30 முதல் 10.00 மணி வரை தெரு விளக்குகளை அணைத்து இரவு 10.00 மணிக்குப் பிறகு விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.