இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இராணுவத்தினர் குழுவினால் மணல் ஏற்றிச் செல்லப்பட்ட உழவு இயந்திரம் ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்டது.
இராணுவத்தினர் குறித்த டிராக்டரை நிறுத்த உத்தரவிட்டுள்ளதோடு, டிராக்டர் தொடர்ந்து நிறுத்தப்படாமல் சென்றுள்ளது.
பின்னர் இராணுவத்தினர் குறைந்த சக்தியுடன் வானத்தை நோக்கி சுட்டதால், கடத்தல்காரர்கள் தப்பி ஓடியுள்ளதோடு, கட்டுப்பாட்டை இழந்த வண்டி அருகில் உள்ள ஏரிக்குள் சென்றது.
உழவு இயந்திரத்தின் சாரதி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு உழவு இயந்திரத்துடன் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.