இதன்படி, வாகனங்கள் மற்றும் டைல்கள் (Tiles) தவிர அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகவும், நாட்டிலிருந்து பெருமளவிலான அந்நிய செலாவணி வெளியில் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறை போன்ற அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் துறைகள் மீண்டும் எழுச்சி பெற்று வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் ஸ்திரத்தன்மையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க முடியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)