இக்குழுவினரிடம் இருந்து 22,300 அமெரிக்க டொலர்கள், 63,500 யூரோக்கள், 8,725 ஸ்ரேலிங் பவுண்கள், 29,200 சவூதி ரியால்கள் மற்றும் 75,000 திர்ஹாம்கள் இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்களில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்குவதாகவும், இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு (19) எமிரேட்ஸ் Flight EK 649 ஊடாக டுபாய்க்கு செல்ல முற்பட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)