2021 இல் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றோர்கள் எண்ணிக்கை வெளியானது!!

2021 இல் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றோர்கள் எண்ணிக்கை வெளியானது!!

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி கடந்த வருடம் சுமார் 30,000 இலங்கையர்கள் கத்தார் நாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 27,000 நபர்கள் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர், 2021 இல் கிட்டத்தட்ட 20,000 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.

1,600 நபர்கள் சைப்ரஸுக்க்ய்ம், 1,400 பேர் தென் கொரியாவிற்கும் சென்றுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் மொத்தமாக 120,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கையின் வெளிப்புற தொழிலாளர் இடம்பெயர்வு ஆண்டுக்கு ஆண்டு (YoY) 73.6 சதவீதத்தால் குறைவடந்துள்ளதோடு, 2020 இல் 53,713 நபர்களாகவும் குறைந்துள்ளது.  (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.