🎥 VIDEO: மனிதனை தூக்கிச் சென்ற பட்டம் – யாழ்ப்பாணத்தில் நடந்த பரபரப்புச் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

🎥 VIDEO: மனிதனை தூக்கிச் சென்ற பட்டம் – யாழ்ப்பாணத்தில் நடந்த பரபரப்புச் சம்பவம்!

பட்டம் விட்ட இளம் குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்ற சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – மந்திகை பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
advertise here on top


நேற்று இளைஞர்கள் பலர் கூடி அந்தப் பகுதியில் பெரிய பட்டம் ஒன்றை பறக்க விட்டனர். பின்னர் அந்தப் படத்துடன் இன்னொரு பட்டத்தை இணைத்து விடுவதற்கு முனைந்தனர்.

அப்போது, இரண்டாவது பட்டத்தின் ‘முச்சை’ கயிற்றை பிடித்திருந்தவரும், முதல் பட்டத்தின் பறப்பு வேகத்தில் பறக்க ஆரம்பித்தார்.

சுமார் 40 அடி உயரம் வரை பறந்தவரை கீழிறக்க முடியாமல் இளைஞர்கள் திணறினர்.

சுமார், 5 நிமிடங்கள் பறந்த நபர் சுமார் 20 அடிவரை கீழிறங்கிய பின்னர் கையை விட கீழே விழுந்தார்.

பட்டத்தின் கயிற்றில் சிக்கிய தமிழ் இளைஞன்

Posted by Nallamuththu Kugatheesh on Monday, December 20, 2021

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.