நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக மின் பிறப்பாக்கி இயந்திரம் செயலிழக்கப்படுவதால் இன்று (11) மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல பிரதேசங்களில் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் சில தினங்களுக்கு இந்த மின்வெட்டு நாளாந்தம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.