போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செயிதினா முஃபத்தல் சைபுதீனுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) காலை மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் இடம்பெற்றது.
போரா சமூகத்தின் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் வாழ்கின்றனர்.
தான் மிகவும் நேசிக்கும் நாடாக இலங்கைக்கு விஜயம் செய்வதில் மகிழ்ச்சியடைவதாகவும், தம்மைப் பின்பற்றுபவர்களுடன் அதனைத் தொடர்ந்து மேற்கொள்வதாகவும் சைஃபுதீன் கூறினார்.
அரசாங்கத்தின் கோவிட் நிர்வாகத் திட்டத்தைப் பாராட்டிய அவர், இலங்கையின் வளர்ச்சியை எதிர்நோக்குவதாகக் கூறினார்.
கொவிட் செயல்திறன் நிதியத்திற்கு போரா சமூகத்தின் தலைவர் சைபுதீனின் பங்களிப்புக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, முதலீடு மற்றும் வர்த்தகம் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு போரா சமூகத்தின் பங்களிப்பை பாராட்டினார்.
ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் போரா சமூகத்தைச் சேர்ந்த பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். (யாழ் நியூஸ்)