இந்த இரத்த தான முகாம் சிறப்பாய் நிறைவேற காரணமான அதற்கான ஏற்பாடுகளை செய்து தந்த HMC Blood Donor Center, நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்துவதற்கு தேவையான இடத்தை தந்துதவிய ஸ்டபார்ட் ஶ்ரீலங்கன் பாடசாலை நிருவாக்த்தினருக்கும், ஊடக சேவையில் சிறப்பான முறையில் உதவிய Doha radio Tamil, Sithula (QFM), யாழ் நியூஸ், Srilankika Qatar Api media மற்றும் எம்மோடு கலந்து சிறப்பித்த FSMA அமைப்பின் தலைவர் சகோதரர் ரினோஸ் மற்றும் ஏனைய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், இரத்த தானம் வழங்கிய, நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஏனைய உறவுகள் ஆகிய அனைவருக்கும், CWF QATAR அமைப்பினர் மற்றும் Area27 Toastmasters club அமைப்பினர் சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஸாக்கல்லாஹு ஹைரன்
அத்தோடு குறிக்கப்பட்ட நேரம் கடந்தும் பல சகோதர சகோதரிகள் இரத்தம் வழங்க எமது இரத்த தான முகாமிற்கு சமூகமளித்தும், குறித்த நேரத்தில் வந்தவர்களை மாத்திரமே உள்ளே அனுமதிக்கப்பட்டு ஏனையோரை உள்ளே அனுமதிக்க முடியாத நிலைமை இருந்ததையிட்டு அவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்.
-CWF-Qatar Media Unit