தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் கடந்த மூன்று மாதங்களில் பிறந்த ஐந்து பாலூட்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்கு 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ தெரிவித்தார்.
கழுதை, நீர்யானை, ஓரிக்ஸ் மற்றும் இரண்டு குட்டி குரங்குகளுக்கு பெயர் சூட்டப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஐந்து குட்டிகளுக்கு பெயர் வைக்க விரும்பும் சிறுவர்கள் டிசம்பர் 20 ஆம் திகதிக்கு முன் 0706188488 என்ற எண்ணுக்கு SMS, WhatsApp அல்லது nationalzoo.gov.lk மூலம் தாம் சூட்டவுள்ள பெயர்களை அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
குட்டி, முன்மொழியப்பட்ட பெயர், உங்கள் பெயர், வயது, பாடசாலை மற்றும் முகவரி ஆகியவற்றை விபரமாக எழுதும்படி சிறுவர்களை அவர் கேட்டு்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு குட்டிகளுக்கும் மிகவும் பொருத்தமான பெயரை சிறுவர்கள் தேர்வு செய்வார்கள் என்றும், பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டால், கிறிஸ்துமஸ் தினத்தன்று குட்டிகளுக்கு பெயரிடப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், 5 கன்றுகளின் பெயர்களை அனுப்பிய 5 (தேர்ந்தெடுக்கப்பட்ட) சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.