புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ. 14.00 இல் இருந்து ரூ. 17.00 ஆக அதிகரிக்கப்படும் என இராஜாங்க போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"எரிபொருள் விலைகள் குறையும் போது மீண்டும் கட்டணங்கள் குறைக்கப்படும் மற்றும் ஆசனங்களின் திறனுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான தடையை அரசாங்கம் நீக்கும்" என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.
அத்துடன், ஏனைய பேருந்து பயண கட்டணங்கள் 17 சதவீதத்தால் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)