இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையானது பெரும்பாலும் நாளைய தினம் அதிகரிக்கப்படும் என அதன் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் விலை தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக்க பண்டார எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையானது கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, 400 கிராம் பால்மா பொதியொன்றின் விலையினை 90 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலையினை 225 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது.
எவ்வாறாயினும், சந்தையில் தற்போது இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
இவ்வாறானதொரு சூழலில் பால்மா நிறுவனங்கள் மீண்டும் பால்மா விலையினை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.