இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஒருநாள் தலைவராக ரோஹித் சர்மாவை பி.சி.சி.ஐ. இன்று (08) அறிவித்துள்ளது.
2022 ஜனவரியில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா விராட் கோஹ்லியிடம் இருந்து தலைவர் பெறுப்பை ஏற்பார்.
2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கு பின்னர் ரோகித் சர்மா இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே தற்சமயம் ஒருநாள் இந்திய அணிக்கும் அவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.