பொரளையில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கடையிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருந்த கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்றும் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.