இரவு உணவை மிச்சம் வைத்ததாக கூறி சுடுநீரை 11 வயது சிறுமியின் வாயினில் சுடுநீரை ஊற்றி சித்திரவதை செய்த சித்தியை திரப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வலுக்கட்டாயமாக வெந்நீரை ஊற்றியதால் சிறுமியின் வாயில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்ட சிறுமியும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிடுமாறு சித்தி வலுக்கட்டாயப் படுத்தியதாகவும், கட்டையால் தாக்கி, சுடுதண்ணீரை வாயில் ஊற்றியதாகவும் பொலிஸாரின் விசாரணையின் போது சிறுமி தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தாய் தந்தையை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்றுள்ளதுடன், சிறுமியின் தந்தை இரு குழந்தைகளுக்கு தாயான இந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
சிறுமியின் தந்தை கொழும்பு பிரதேசத்தில் கொத்தனார் வேலை செய்து வருவதக விசாரணைகளின் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)