கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண்!


கிளிநொச்சியில் இளம் தாயொருவர்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.


நேற்று (18) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


32 வயதுடைய நிலகரட்ண ஜெயசீலி என்ற 03 பிள்ளைகளின் தாயாரே இவ்வாாறு தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான இவர் முன்பள்ளி ஆசிரியையாக சேவை புரிந்து வந்துள்ளார்.


கிளிநொச்சி விநாயகபுரம், இயக்கச்சி பகுதியை சேர்ந்த இவர் தொழிலின் நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.


இவரது கணவர் பிரிந்துள்ள நிலையில் 03 பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார். 


இந்நிலையில் இவரது மூத்த பிள்ளைகள் இரண்டும் தாயாருடன் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் வழமையாக தங்குவர்.


நேற்று இரவும் வழமைபோல இரண்டு பிள்ளைகளும் சென்றுள்ளனர். அதே வேளை கடைசி பிள்ளை தாயாருடன் வழமைபோல நின்றுள்ளது. இந்நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.


சடலத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.


-தமிழ் பக்கம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.