நாட்டில் இன்று (10) (வெள்ளிக்கிழமை) முதல் மின் விநியோகத் தடை ஏற்படாது என இலங்கையின் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன, கடந்த வாரத்தில் நாட்டின் பல பாகங்களிலும் மாலை 6 மணிக்குப் பின்னர் அதிக தேவை ஏற்பட்ட காலப்பகுதியில் ஒரு மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
மின் உற்பத்தி பற்றாக்குறை மற்றும் அதிக தேவை காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
நாளாந்த மின்சாரத் தேவையில் 60% நீர் மின் நிலையங்களில் இருந்தும், எஞ்சிய மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்தும் பெறப்படுகிறது என்றும் அவர் கூறினார்.