நாட்டில் கணினி மற்றும் மொபைல் அடிப்படையிலான விளையாட்டுக்களுக்கு தடை?

நாட்டில் கணினி மற்றும் மொபைல் அடிப்படையிலான விளையாட்டுக்களுக்கு தடை?


பாராளுமன்றத்தில் பல கணினி மற்றும் கைத்தொலைபேசி அடிப்படையிலான விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டுக்கள் சில சிறுவர்களை உளவியல் ரீதியாக பாதித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெரும்பாலான சிறுவர்கள் கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர் என்று அவர் நேற்று (01) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். 

இந்த கணினி விளையாட்டுகளில் சிலவற்றை விளையாடுவதன் மூலம் சில சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செல்வதாக அவர் மேலும் கூறினார். 

இந்த விளையாட்டுக்களை தடை செய்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.