நடைபாதைகளில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நடைபாதையில் நிறுத்தப்படும் வாகன சாரதிகள் சம்பவ இடத்தில் இருந்தால் கடுமையாக எச்சரிக்கப்படும் எனவும் அவ்வாறான சாரதிகள் இல்லாத போது வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)