பண்டிகைக் காலத்துக்கு முன்பாகவே கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவிடவும்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்கள்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொவிட் நோயை அடக்குவதற்கான விசேட குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் நோயை கட்டுப்படுத்தும் விசேட குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இரண்டாவது டோஸ் எடுத்து 03 மாதங்கள் நிறைவடைந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெறத் தகுதியுடையவர்கள். அதன்படி, தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் நாளை முதல் ஃபைசர் தடுப்பூசி பூஸ்டர் டோஸாக கிடைக்கும்.
பெரும்பாலான கொரோனா தொற்றாளர்கள இன்று பதிவாகியுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்று சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி அவதானிப்புகள் காட்டுகின்றன. கோவிட் தொற்று மற்றும் இறப்பு அபாயத்தைக் குறைக்க தடுப்பூசி கட்டாயமாகும். இது தொடர்பில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விரைவில் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
கோவிட் பரவுவதைத் தடுக்க தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்க இப்போது சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொது இடங்களுக்குள் நுழையும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கோவிட் குழு இன்று முடிவு செய்தது.
இரண்டாவது டோஸ் 16 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், முதல் டோஸ் 12 முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் செலுத்த அனுமதிக்கப்படுகிறது. இதன்படி, தடுப்பூசியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விமான நிறுவனங்கள் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. சுற்றுலாத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தற்போதுள்ள ஊக்குவிப்பைக் கருத்தில் கொண்டு மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
- தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத யாரும் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதி இல்லை...
- தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களிலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள்.
- 16 - 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ்
- 12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் டோஸ் செலுத்த கவனம்.
- வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொவிட் நோயை அடக்குவதற்கான விசேட குழு உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் நோயை கட்டுப்படுத்தும் விசேட குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இரண்டாவது டோஸ் எடுத்து 03 மாதங்கள் நிறைவடைந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெறத் தகுதியுடையவர்கள். அதன்படி, தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் நாளை முதல் ஃபைசர் தடுப்பூசி பூஸ்டர் டோஸாக கிடைக்கும்.
பெரும்பாலான கொரோனா தொற்றாளர்கள இன்று பதிவாகியுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்று சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி அவதானிப்புகள் காட்டுகின்றன. கோவிட் தொற்று மற்றும் இறப்பு அபாயத்தைக் குறைக்க தடுப்பூசி கட்டாயமாகும். இது தொடர்பில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விரைவில் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
கோவிட் பரவுவதைத் தடுக்க தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்க இப்போது சட்ட ஆலோசனை கோரப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொது இடங்களுக்குள் நுழையும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கோவிட் குழு இன்று முடிவு செய்தது.
இரண்டாவது டோஸ் 16 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், முதல் டோஸ் 12 முதல் 15 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் செலுத்த அனுமதிக்கப்படுகிறது. இதன்படி, தடுப்பூசியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விமான நிறுவனங்கள் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. சுற்றுலாத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை தற்போதுள்ள ஊக்குவிப்பைக் கருத்தில் கொண்டு மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
(தமிழாக்கம் யாழ் நியூஸ்)