ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளராக லக்ஷயன் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளராக லக்ஷயன் நியமனம்!


ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அமைப்பாளராக லக்ஷயன் முத்துக்குமாரசாமி இன்று (20) திங்கட்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் அவரது காரியாலயத்தில் வைத்து இந்நியமனம் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில், ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திர பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.