இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஆசியாவின் ராணி' யாருக்கு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஆசியாவின் ராணி' யாருக்கு?


இலங்கையில் கண்டறியப்பட்ட 'ஆசியாவின் ராணி' (Queen of Asia) என பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நீலக்கலை (Blue Sapphire) கொள்வனவு செய்வதில் அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


குறித்த நீலக்கல்லை, இணையவழியில் இடம்பெறும், சர்வதேச ஏல விற்பனையில் முன்வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.


இதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் முன்னதாக விலைமனு கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ள நிலையில், சீனாவும் இந்த போட்டியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வொஷிங்டன் நகரில் உள்ள நூதனசாலை ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக அமெரிக்காவும் குறித்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.


310 கிலோகிராம் எடைகொண்ட ஆசியாவின் ராணியென அழைக்கப்படும் இந்த நீலக்கல்,  இரத்தினபுரி - பட்டுகெதர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.


தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில், இந்த நீலக்கல் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


ஒற்றைப் படிகத்தினாலானமையினால் அதிக மதிப்புமிக்க இந்த நீலக்கல், 15 இலட்சத்துக்கும் அதிக கரட் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.