மூன்று இலங்கை அமைப்புகளுக்கு தடை விதித்த பேஸ்புக் நிறுவனம்!

மூன்று இலங்கை அமைப்புகளுக்கு தடை விதித்த பேஸ்புக் நிறுவனம்!


பேஸ்புக்கில் இடம்பெறும் இற்றைப்படுத்தல்கள் மற்றும் அது தொடர்பான ஒழுங்குப்படுத்தல்கள் ஊடாக, உலகில் உள்ள பல்வேறு அமைப்புகள் விளம்பரங்களை மேற்கொள்வதற்கும், அமைப்பு சார்பாக பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பேஸ்புக்கில் வருடத்துக்கு ஒரு முறை இந்த அமைப்புகள் தொடர்பான பட்டியலை இற்றைப்படுத்துவதுடன், இதனூடாக இலங்கையை தளமாகக் கொண்ட மூன்று அமைப்புகளுக்கு இவ்வாறு பிரசாரங்களை மேற்கொள்ள பேஸ்புக் தடை விதித்துள்ளது.


இதன்படி, இவ்வருடமும்  பேஸ்புக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான பதிவுகளை மேற்கொள்ள அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.


பேஸ்புக்  தமது வகைப்படுத்தலின் கீழ், விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டு இவ்வாறு தடை விதித்துள்ளது.


இதற்கிடையில், நாட்டில் உள்ள பொதுபல சேனா அமைப்பு மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த ஞானசார தேரர் தொடர்பிலும் எந்தவொரு பதிவையும் இடுவது பேஸ்புக்கினால் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


அவ்வாறே, 'சிங்ஹலே' என்ற அமைப்புக்கும் தொடர்ந்தும் தடை விதித்துள்ளது.


மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு அமைப்புகளுக்கும் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு மத்தியில் வெறுப்புப் பேச்சுகளை கொண்டுசெல்லுதல் மற்றும் சமூகங்களுக்கு இடையில் கிலேசமூட்டும் கருத்துக்களை பகிர்தல் என்றதன் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.