நாட்டில் பால்மா தட்டுப்பாடு நிலவும் கால எல்லை தொடர்பிலான அறிவிப்பு!

நாட்டில் பால்மா தட்டுப்பாடு நிலவும் கால எல்லை தொடர்பிலான அறிவிப்பு!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாடு, எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் நிர்வத்தியாகும் என்று பால்மா இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சந்தையில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு. சில இடங்களில் அதிக விலைக்கு பால்மா விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டொலர் பற்றாக்குறை காரணமாக வங்கிகளின் கடன் உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தாமதமடைந்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர்

இதேவேளை, உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றமையினால், எதிர்வரும் காலங்களில் பால்மா விலையை அதிகரிக்க நேரிடும் என்றும் அந்த சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தகவல் வழங்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.