இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (30) இந்தியா சென்றடைந்தார்.
அமைச்சரை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வரவேற்றார்.
இன்றும் (01) நாளையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களுடன் நிதி அமைச்சரான பசில் ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட சுற்றுலாத்துறைக்கு அமைச்சர் ஒத்துழைப்பைக் கோருவார் என்று இந்தியப் பத்திரிகையான 'தி இந்து' செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, பசில் ராஜபக்ஷ அங்கு பூரி சமைத்துக் கொண்டிருந்ததை காணமுடிந்தது. (யாழ் நியூஸ்)