நிதி அமைச்சர் பாரிய திட்டம் தயாரிப்பு; விலைகள் கடுமையாக குறையவுள்ளது!

நிதி அமைச்சர் பாரிய திட்டம் தயாரிப்பு; விலைகள் கடுமையாக குறையவுள்ளது!


ஏப்ரல் மாத புத்தாண்டுக்குள் பொதுமக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க முடியும் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அதற்குள் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக குறையும் எனவும் அவர் கூறினார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இதற்கான பாரிய திட்டத்தை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும், அதற்கான பலன் எதிர்வரும் ஏப்ரலில் கிடைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, பொருளாதார நிபுணர்கள் என்ன சொன்னாலும் எதிர்காலத்தில் மக்களுக்கு பெருமளவு நிவாரணம் கிடைக்கும் என்றார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.