இந்த விடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹாரிஸ் நேற்று (07) சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இதற்குப் பதிலளித்த வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, இந்தப் பிரச்சினை மிக நீண்டகாலமானதாகும் என்றும், இதில் ஏதோ ஒரு வகையில், இனரீதியான மாறுபாடுடைய பிரச்சினையும் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இது தங்களது மேய்ச்சல் தரை என தமிழர்கள் கூறுகின்றனர். தங்களது வயல் நிலம் என முஸ்லிம்கள் கூறுகின்றனர்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், பணிப்பாளர் நாயகம் அங்குச் சென்று பார்த்து, சில பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இதனைத் தீர்க்கச் சென்றால், எவருக்காவது, ஏதோ ஒரு வகையில், விட்டுக்கொடுப்பை செய்யவேண்டி ஏற்படும்.
எனவே, நாம் இதில் தலையிட்டு. நியாயமான தீர்வை வழங்கவே எதிர்பார்க்கின்றோம். மேன்முறையீட்டு நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு ஒன்றும் உள்ளது. எனவே, இந்த விடயத்தில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
அதேநேரம், அதிகாரிகள் இந்த விடயத்தில் அறிக்கை சமர்ப்பித்ததன் பின்னர், தங்களது மட்டத்தில் எவ்வாறான நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவதானம் செலுத்துவதாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸாரப், பொத்துவில் பிரதேசத்தில் தற்போது நகரப் பகுதிகளுக்கும் யானைகள் பிரவேசிப்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டினார். இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.