பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு நிதி திரட்ட சியால்கோட்டில் உள்ள வர்த்தக சமூகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிதிக்காக 100,000 அமெரிக்க டாலர்கள் திரட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பிரியந்த குமாரவின் மாதாந்த சம்பளத்தை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்ந்து வழங்குவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு பாகிஸ்தானிடம் இருந்து எந்த சலுகையும் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அடிப்படைவாதிகளிமிருந்து பிரியந்த குமாரவை காப்பாற்ற முயன்ற சக ஊழியரான மாலிக் அட்னானுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)