பேராதனை - நில்லம்ப ஆற்றில் திடீர் வான்கதவு திறந்தமையால் உயிர் பலியான 20 வயது தாய் மற்றும் அவரது குழந்தை!

பேராதனை - நில்லம்ப ஆற்றில் திடீர் வான்கதவு திறந்தமையால் உயிர் பலியான 20 வயது தாய் மற்றும் அவரது குழந்தை!


பேராதனை - நில்லம்ப ஆற்றில் காணாமல் போன 20 வயதுடைய தாய் மற்றும் அவரது இரண்டரை வயது மகளை ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மூன்று பொலிஸ் மீட்புக் குழுக்கள் தேடி வருகின்றன. 

அவர்கள் கண்டி, மாபனவத்துரவில் உள்ள தமது வீட்டிலிருந்து முச்சக்கர வண்டியில் தொலுவ - நிலம்ப நீர்த்தேக்கத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். 

தாய், பாத்திமா அஸ்ரா (20), தந்தை முகமது அப்துல் அஸீஸ், அவர்களது இரண்டரை வயது பெண் குழந்தை மற்றும் தங்களின் நெருங்கிய உறவுகள் இருவருடன் மொத்தம் ஐவர் பயணம் செய்துள்ளனர் என்று பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

பாத்திமாவின் மாமா அஸீஸ் கூறுகையில், 

அவரது மகனும், மகளும் ஆற்றின் பாதுகாப்பான பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பலத்த நீரோட்டம் ஏற்பட்டது. நீர்த்தேக்கத்தின் வான்கதவு திடீரென திறக்கப்பட்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அவர் கூறியபடி, "அந்த நீரோட்டமானது அவரது மருமகளை இழுத்துச் சென்றது என்றும் அவரது மகன் அவளைப் காப்பாற்ற விரைந்துள்ளார். 

குழந்தையைப் வைத்துக் கொண்டிருந்த எனது மற்ற மகன் அதை வைத்துவிட்டு நீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயன்றார். பின்னர் குழந்தையும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டது" என்று அவர் கூறினார். 

அப்பகுதி மக்கள் குழந்தையின் தந்தையை மீட்டனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மொஹமட் பாரிஸ் ரஸ்பானின் சடலத்தை பொலிஸ் மற்றும் கடற்படை மீட்புக் குழுக்கள் கண்டெடுத்தன. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.