சுவிட்சர்லாந்து நாட்டில் மகிழ்ச்சியாக தற்கொலை செய்துகொள்ள நவீன இயந்திரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுவிட்சர்லாந்து நாட்டில் மகிழ்ச்சியாக தற்கொலை செய்துகொள்ள நவீன இயந்திரம்!


சார்கோ கேப்சூல் (Sarco Capsule) எனப்படும் அமைதியான முறையில் தற்கொலை செய்துகொள்ளும் இயந்திரத்தினைப் பயன்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை 3D Printed தொழினுட்பம் மூலம் அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச லாப நோக்கற்ற எக்ஸிட் இன்டர்நேஷனல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த இயந்திரத்தினை அதன் உள்ளே அமர்ந்திருப்பவர் செயற்படுத்த முடியும், மேலும் அதை எளிதாக எங்கும் இழுத்துச் செல்ல முடியும். சவப்பெட்டி போன்ற இந்த அமைப்பு "மிகவும் வசதியாக" வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எக்சிட் இன்டர்நேஷனல் நிறுவனர் டாக்டர் பிலிப் நிட்ச்கே குறிப்பிடுகிறார்.

ஒருவர் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்றதும் அவர்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்படும், அதன் பிறகு செயன்முறையைச் செயற்படுத்த பொத்தானை அழுத்துவதற்கு அவர்களுக்கு நேரம் வழங்கப்படும். பொத்தானை அழுத்தியதும், கேப்சூல் நைட்ரஜனால் நிரப்பப்படும், இது 30 வினாடிகளில் ஒட்சிசன் அளவை 21% இலிருந்து 1% ஆகக் குறைக்கும். அந்த நபர் தன்னிலையை மறப்பார்.

மேலும் சுயநினைவை இழப்பதற்கு முன்பு சிறிது மகிழ்ச்சியாக உணரலாம்" சுயநினைவை இழந்த பிறகு, இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்குள் தூங்குகிறார், அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவிற்குச் சென்று விடுகிறார். அதன் பின்னர். 5 -10 நிமிடங்களுக்குப் பிறகு மரணம் நிகழும் என்று அவர் விளக்குகிறார்.

முழு செயன்முறையின் போதும், ​​உள்ளே இருக்கும் நபர் எந்த பீதியையும் அல்லது மூச்சுத் திணறல் உணர்வையும் உணராமல் அமைதியான முறையில் இறப்பார் என்று நிட்ச்கே குறிப்பிடுகிறார்.

இந்தமுறை மூலம் இதுவரை 1,300 பேர் வரை இறந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இவ்வாறானதொரு இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அனுமதியளித்துள்ளமை அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது.

நன்றி- தினகரன்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.