எம்பிலிப்பிட்டியவில் இருந்து மஹரகம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து மூவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் பஸ்சின் கண்ணாடி சேதமடைந்தது.
அதிக வேகத்தில் கொழும்பு நோக்கி பயணித்த இந்த பஸ் வண்டி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் வண்டி என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)