கூறியதை செய்து காட்டிய மத்திய வங்கி ஆளுநர்!

கூறியதை செய்து காட்டிய மத்திய வங்கி ஆளுநர்!

மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தனது பதிவில்,

ஏற்கனவே தாம் அறிவித்தப்படி அதிகாரபூர்வமாக இந்த கையிருப்பை அடைய முடிந்திருத்திருக்கின்றது.

அதேநேரம் இந்த தொகையை 2021ஆம் ஆண்டு முடியும் வரையில் தங்கவைத்துக்கொள்ள முடியும் என தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக டொலருக்கான பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியினை சந்தித்துள்ள நிலையில் கடந்த சில சில தினங்களுக்கு முன்னர் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த அண்டு இறுதிக்குள் டொலருக்கான கையிருப்பு உயர்வடையும் என்றும் ஆனால் அதற்கான இரகசியத்தை வெளியிட் மாட்டோம் என்றும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.