திடீர் மின் தடைகளை சீர் செய்யப் போவதில்லை! -மின்சார சபை பொறியியலாளர் சங்கம்

திடீர் மின் தடைகளை சீர் செய்யப் போவதில்லை! -மின்சார சபை பொறியியலாளர் சங்கம்


தமது 08 மணிநேர கடமை நேரத்திற்கு பின்னர், ஏற்படும் திடீர் மின்தடைகளை சீர்செய்யும் சேவைகளில் இருந்து விலகவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


இலங்கையில் நான்கில் ஒரு பகுதிக்கு நேற்று முன்தினம் மின்சாரத் தடை ஏற்பட்டது.


ஒன்றரை மணித்தியாலயத்திற்குள் அதனை சீர் செய்ததாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.


அதற்கு பொறியியலாளர்களின் பங்களிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


ஆனால் இன்று முதல், மின்சார துண்டிப்புக்களை மீள் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.


சட்டவிரோத நியு போட்ரஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்களால் பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.


இந்த கொடுக்கல் வாங்கல் மூலம் இலங்கை மின்சார சபைக்குள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.