பாகிஸ்தான் - சியல்கோட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளரான பிரியந்த குமாரவின் மாதாந்த வேதனத்தை ஒவ்வொரு மாதமும் 05 ஆம் திகதி வைப்பிலிடுவதற்கு, அவர் பணியாற்றிய நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில், பிரியந்த குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்கிய சந்தர்ப்பத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பிரியந்த குமாரவின் உடலை இலங்கைக்கு கொண்டு வந்தமை மற்றும் இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளை அரச நிதியில் ஈடுகட்டவும் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
எனினும், அனைத்து செலவுகளையும் உரிய நிறுவனங்களே ஏற்றுக் கொண்டதாலும், பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படாததாலும், குறித்த தொகையை மதிப்பீடு செய்து, பிரியந்த குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு வழங்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.