தொடம்கொட, புஹாபுகொட பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவரின் 02 வயதுடைய குழந்தை ஒருவரை தொடர்ச்சியாக தாக்கியதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த தம்பதியருக்குப் பிறந்த இந்த பெண் குழந்தையை தாக்கியதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து தொடங்கொட பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த குழந்தை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் உறவினர் ஒருவரின் பராமரிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். (யாழ் நியூஸ்)