பொலிஸாரின் பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு!

பொலிஸாரின் பொதுமக்களுக்கான விசேட அறிவிப்பு!


பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவது தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதனடிப்படையில், கிருலப்பனை, பாதுக்க, களுத்துறை மற்றும் ரங்கல போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களை விநியோகிக்கும் பல இடங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

போலியான ரூபாய் நோட்டுகளுடன் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ. 5000 மற்றும் ரூ. 1000 நோட்டுகள், அச்சிடும் இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் சோதனையின் போது மீட்கப்பட்டது. 

மேலும் டிசம்பர் பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவதில் சந்தேகநபர்கள் கவனம் செலுத்தி வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பண பரிவர்த்தனைகளின் போது மாற்றக்கூடிய போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலைய உரிமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

போலி நாணயத்தாள்களை மாற்ற முயற்சிக்கும் சந்தேக நபர்களைப் பற்றி பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஐ தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.