இலங்கை மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்கு புறம்பாக செயற்பட்ட 04 நாணய மாற்று முகவர் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, நிதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் தொடர்பான பணிப்புரைகளுடன் இணங்கியொழுகுவதற்கு அவர்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- New Natasha (Pvt) Ltd.), இல.12, சூப்பர் மாக்கெற் கொம்பிளெக்ஸ், வென்னப்புவ.
- George Michael Holdings (Pvt) Ltd.), இல. 157, சிலாபம் வீதி, வென்னப்புவ.
- Royal Money Exchange (Pvt) Ltd.), இல. 55, காலி வீதி, கொழும்பு 06.
- Prasanna Money Exchange (Pvt) Ltd.) இல. 57, காலி வீதி, கொழும்பு 06.
போன்ற தவறிழைக்கும் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் அறிவித்தலின் மூலம் தொடர்பூட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய தவறும் சந்தர்ப்பத்தில், அத்தகைய அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த மற்றும் மீளப்பெற மத்திய வங்கி நிர்ப்பந்திக்கப்படும்.
அத்துடன், வங்கிகளால் வழங்கப்படும் வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களை அதிகரிக்கும் அதிகாரம் நாணய மாற்று நிறுவனங்களுக்கு இல்லை எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது பொது மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.